நரிக்குடி மானூர் சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் பால்குடம் எடுத்து வழிபாடு
ADDED :2792 days ago
நரிக்குடி: மானூர் சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு நேற்று (மார்ச் 30)ல் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
சிவசுப்பிரமியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரவிழா மார்ச் 26 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை, மாலை வீதிஉலா நடந்தது. ஐந்தாம்நாள் நிகழ்ச்சியான பால்குடம் எடுத்து, காவடி மற்றும் அலகு குத்தி ஊர்வலம் வந்தனர்.
உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏப்ரல் 2 ல் திருக்கல்யாணம், 3 ல் தேரோட்டம் நடைபெற உள்ளது.