காளஹஸ்தி உண்டியல் வசூல் ரூ.35 லட்சம்
ADDED :3082 days ago
நகரி: காளஹஸ்தி கோவில் உண்டியலில், எட்டு நாட்களில், 35.33 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி, வாயுலிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம், எட்டு நாட்களில், 35,33,090 ரூபாய் ரொக்கம், 127 கிலோ வெள்ளி, 51 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன.
மேற்கண்ட தகவலை, கோவில் நிர்வாக அதிகாரி பிரம்ம ரம்பா தெரிவித்தார்.