ஊத்துக்கோட்டை ஆனந்தஜோதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ஊத்துக்கோட்டை: பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட ஆனந்தஜோதி விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகரில் பக்தர்கள் பங்களிப்புடன், ஆனந்தஜோதி விநாயகர் கோவில் கட்டப்பட்டது பணிகள் முடிந்து, நேற்று (மார்ச் 30)ல் காலை, 8:30 மணிக்கு, மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
முன்னதாக, நேற்று (மார்ச் 30)ல் மாலை, 5:00 மணிக்கு, அனுக்ஞை, பகவத் பிராத்தனை, எஜமான சங்கல்பம், ஆசார்ய வரணம், புண்யாவசனம், வாஸ்து ஹோமம், முதல் கால ஹோமம், பூர்ணாஹூதி, அஷ்டபந்தனம் சாற்றுதல்ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று (மார்ச் 30)ல் காலை, 5:00 மணிக்கு, மகா சாந்தி திருமஞ்சனம், காலை, 6:00 மணிக்கு, புண்ணியாவசனம், இரண்டாம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கும்ப புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 8:30 மணிக்கு, மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
தொடர்ந்து, மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.