திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேகம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவில் நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் இன்று(ஏப்., 2) மதியம் 12:30 முதல் 12:50 மணிக்குள் நடக்கிறது. நேற்றுமதியம் 3:00 மணிக்கு சுவாமி, தெய்வானை பச்சை குதிரை வாகனத்தில் கிரி, ரத வீதிகளில் எழுந்தருளினர். கிராமத்தினர் சார்பில் பச்சை குதிரைக்கு கவாட களி கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்துசுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. இரவு 7:30 மணிக்கு கோயில் ஆறுகால் பீடத்தில் தங்கக் குடத்தில் புனித நீர் நிரப்பி சிறப்பு பூஜை நடந்தது. அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார். சுவாமியின் கீரிடத்திற்கு புனித நீர் அபிஷேகம், தீபாராதனை முடிந்து, சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்யப்பட்டு, கரத்தில் நவரத்தின செங்கோல், வெள்ளி சேவல் மற்றும் மயில் கொடிகள் சாத்துப்படியானது. பின் தீபாராதனை முடிந்து சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. இன்றுதிருக்கல்யாணமும், நாளை (ஏப்., 3) தேரோட்டமும் நடக்கிறது.