பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நிறைவு
ADDED :2789 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனித்
திருவிழா நிறைவடைந்து கொடியிறக்கப்பட்டது. பத்து நாட்களாக பல்வேறு
வாகனங்களில் வலம் வந்த அம்மன் நேற்று முன்தினம் இரவு மின்சார தீப தேரிலும்,
தொடர்ந்து. பூப்பல்லக்கில் கள்ளர் அலங்காரத்துடன் வைகையில்
எழுந்தருளினார். நேற்று காலை தீர்த்தவாரியும், மாலையில் அம்மன் வெள்ளி
ரிஷபவாகனத்தில் வலம் வந்த பின் கொடியிறக்கப்பட்டது. இன்று அதிகாலை பால்குட
ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு அபிேஷகம் நடைபெறும்.