செல்லாயி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா
ADDED :2789 days ago
அலங்காநல்லுார்:பாலமேடு செல்லாயி அம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது.மங்கள இசையுடன் அம்மனுக்கு சாட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. பின் பக்தர்கள் பொங்கல் வைத்தும் மாவிளக்கு, பால்குடம் எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். அம்மனுக்கு செலுத்த வேண்டிய அபிஷேக பொருள்களை சுற்றியுள்ள கிராம பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலில் வைத்து வழிபட்டனர்.