பெண்கள் மட்டும் வடம் பிடித்த முருகன் கோயில் தேரோட்டம்
ADDED :2789 days ago
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம்கம்பைநல்லுாரில், பெண்கள் மட்டுமே, வடம் பிடித்து இழுத்த, சிவசுப்பிரமணியர் சுவாமி கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது.கம்பைநல்லுார் சிவசுப்பிரமணியர் சுவாமி முருகன் கோயிலில், பங்குனி உத்திர விழா, 26ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ல், சுவாமி திருவீதி உலா, 30ல், பால்குடம் எடுத்தல், இடும்பன் பூஜை, சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான, பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கும், சிவசுப்பிரமணியர் சுவாமி தேரோட்டம் நேற்று நடந்தது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் வடம் பிடித்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்து, இறுதியில் கோயில் அருகே நிலை நிறுத்தப்பட்டது.