உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் கிரிப் டைல்ஸ் பதிப்பு

ராமேஸ்வரம் கோயிலில் கிரிப் டைல்ஸ் பதிப்பு

ராமேஸ்வரம்; பக்தர்கள் வசதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கிரிப் டைல்ஸ் ஒட்டும் பணி நடக்கிறது. ராமேஸ்வரம் கோயிலினுள் உள்ள 22 தீர்த்தத்திலும் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.

இத்தீர்த்தங்களில் நீராட தினமும் ஏராளமான பக்தர்கள் வருவதால், தீர்த்த கிணற்றை சுற்றி பாசி படிந்து பக்தர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். சில ஆண்டுக்கு முன் தீர்த்த கிணறுகளை சுற்றி கிரிப் டைல்ஸ் பதிந்தனர்.பக்தர்கள் வருகையால் நாளடைவில் டைல்சில் கிரிப் தன்மை இழந்து வழுவழுப்பானதால் மீண்டும் பக்தர்கள் வழுக்கி விழுந்தனர். இதனையடுத்து பழைய டைல்ஸ் கல்லை அகற்றி கோயில் 2ம் பிரகாரத்தில் தீர்த்த கிணறு செல்லும் வழியில்ஆன்டி ஸ்கிட் கான்கிரீட் டைல்ஸ் பதிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பக்தர்கள் நீராடும் போது கூட்ட நெரிசல் மற்றும் இடறி விழுவதை தவிர்க்க ரூபாய் 26 லட்சத்தில் கோயிலுக்குள் 6 புதிய தீர்த்த கிணறும், கிரிப் டைல்ஸ் கற்கள் பதிக்கப்படுவதாக ஊழியர் கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !