வேளாங்கண்ணியில் ஈஸ்டர் கோலாகலம்
நாகப்பட்டினம்: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த சிறப்பு திருப்பலியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புனித வெள்ளியன்று, சிலுவையில் அறையப்பட்டு மரித்த இயேசு கிறிஸ்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது, ஈஸ்டர் பண்டிகையாக, கிறிஸ்துவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், சிறப்பு திருப்பலி நடந்தது.நேற்று முன்தினம் இரவு, 10:45 மணிக்கு, தேவாலய அதிபர் பிரபாகர் தலைமையில், 25 பாதிரியார்கள் பங்கேற்ற, சிறப்பு பாடல் திருப்பலி, தேவாலய கலையரங்கில் துவங்கியது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து பக்தர்களுக்கு காட்சி தரும் வைபவம், தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது.நள்ளிரவு, 1:45 மணி வரை நடந்த பேரையூர்;பேரையூர் முருகன் கோயில் மொட்டமலை ஊற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கும். கோயிலில் இதை புனிதநீராக பயன்படுத்துவர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் இந்நீரை பாட்டில்களில் அடைத்து எடுத்து செல்வர். சில மாதங்களாக தீர்த்தத்தொட்டியில் நீர் சுரப்பு சிறிது சிறிதாக குறைந்து தற்போது முற்றிலும் வற்றி விட்டது.
இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.சிறப்பு திருப்பலியில், ஏராளமானோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, கலந்து கொண்டனர். நேற்று மாலை, 6:30 மணிக்கு, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து திருத்தேர் பவனி, தேவாலயத்தில் நடந்தது.