உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் படையலிட்ட ஒரு எலுமிச்சை ரூ.35,500க்கு ஏலம்

கோவிலில் படையலிட்ட ஒரு எலுமிச்சை ரூ.35,500க்கு ஏலம்

உளுந்துார்பேட்டை: திருவெண்ணைநல்லுார் அருகே, பங்குனி உத்திர விழாவில், கோவிலில் படையல் செய்த ஒரு எலுமிச்சை பழம், 35 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லுார் அடுத்த, ஒட்டனந்தல் கிராமத்தில், பழமையான, ரத்தின வேல்முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கருவறையில், வேல் மட்டுமே இருக்கும்.

இங்கு, ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும்.கடந்த 21ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கிய பங்குனி உத்திர விழாவில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, ஒன்பது நாள் திருவிழாவில், கருவறையில் உள்ள வேலில் குத்தப்பட்ட, ஒன்பது எலுமிச்சை பழங்கள், ஏலம் விடப்பட்டன.இதில், முதல் நாள் எலுமிச்சை பழம் 35 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இரண்டாவது நாள் பழம் 8,500; மூன்று மற்றும் நான்காவது நாள் பழம், தலா 8,100; ஐந்தாவது நாள் பழம் 8,500; ஆறாவது நாள் பழம் 8,100; ஏழாவது நாள் பழம் 9,500; எட்டாவது நாள் பழம் 8,100; ஒன்பதாவது நாள் எலுமிச்சை பழம் . 8,500 ரூபாய் என, 1.29 லட்ச ரூபாயக்கு ஏலம் போனது. ஏலம் கேட்கும் உரிமை உள்ளூர்காரர்களுக்கு மட்டுமே உள்ளதால், அவர்களை உடன் வைத்து கொண்டு வெளியூர்காரர்கள் ஏலம் கேட்டனர். முந்தைய ஆண்டுகளில் எலுமிச்சை பழம் வாங்கி பயனடைந்தோர், கோவிலில் நேர்த்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !