பொன்காளியம்மன் கோவிலில் 4ல் தீப்பந்தம் பிடித்தல் நிகழ்ச்சி
ADDED :2788 days ago
கொடுமுடி: சிவகிரி அருகே, தலையநல்லூரில், பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு தேர்த்திருவிழா, கடந்த மாதம், 27ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இன்று இரவு கிராம சாந்தி, காப்புகட்டுதல் நடக்கிறது. ஊஞ்சலூர் காவிரியிலிருந்து அலகு குத்தி ஊர்வலம், தீர்த்தக்காவடி எடுத்து வருதல், நாளை நடக்கிறது. பொங்கல் வைபவம், தேரோட்டம், 4ல் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கையில் தீப்பந்தம் ஏந்த, நள்ளிரவில் தேரோட்டம் நடக்கும். வரும், 5ல் இரவு வண்ணாரக் கருப்பணசாமி பொங்கல் நடக்கிறது. 6ல் மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் திருவீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.