கைலாசநாதர் கருவறை தரிசனம்: தற்காலிக தடை
ADDED :2861 days ago
தாரமங்கலம்: கைலாசநாதருக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், கருவறை தரிசனத்துக்கு, தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தாரமங்கலம், கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம், வரும், 22ல் நடக்கவுள்ளது. அதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த, 26ல், சிவகாமசுந்தரி சமேத கைலாசநாதர் உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளுக்கும் பாலாலயம் செய்யப்பட்டது. இதனால், கருவறை தரிசனத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. தற்போது, கோவில் யாகசாலையில், பக்தர்கள் சுவாமியை தரிசிக்கின்றனர்.