மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
ADDED :2787 days ago
சங்ககிரி: சங்ககிரி, சின்னாக்கவுண்டனூர் பஞ்., கோபாலனூரில், வலம்புரி விநாயகர், மாரியம்மன், அம்மன், பாலமுருகன், பெருமாள், சுவாமிகளுக்கு நாளை கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நேற்று மரக்கன்று நட்டு, காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, கிராமசாந்தி பூஜை நடந்தது. இன்று, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், முதல்கால யாக வேள்வி பூஜை நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு, இரண்டாம்கால யாக வேள்வி, 9:00 மணிக்கு வலம்புரி விநாயகர், மாரியம்மன், அம்மன், பாலமுருகன், பெருமாள் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.