அருணாசலேஸ்வரர் கோவிலில் முளைப்பாரி விடும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ நிறைவு விழாவில், தாமரை குளத்தில், முளைப்பாரி விடுதல் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 30ல், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நிறைவு விழாவான நேற்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவருக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. உற்சவ மூர்த்திகளான உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், தாமரை குளக்கரையில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், கோவில் குருக்கள் சிறப்பு பூஜை செய்து, முளைப்பாரி விடுதல் நடந்தது. கோவில் குளம் வற்றி, தண்ணீர் அசுத்தமாக இருந்ததால், பித்தளை அண்டாவில், முளைப்பாரி கரைக்கப்பட்டு, கோவில் குளத்தினருகே விடப்பட்டது. நேற்று முன்தினம், இரவு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.