திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சூரிய வழிபாடு
ADDED :2847 days ago
திருச்சி:திருச்சி, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்தை, சூரிய பகவான் வழிபடும் நிகழ்ச்சி நடந்தது.சூரியன் உதயத்தை தட்சனாயணம், உத்ராயணம் என, இரண்டாக வகைப்படுத்தி உள்ளனர். உத்ராயண காலக்கட்டத்தில், திருச்சி மாவட்டம், திருப்பட்டூர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது, சூரியக் கதிர்கள் படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த அரிய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். திருப்பட்டூர் கோவிலில், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, இந்த சூரிய வழிபாடு நடைபெறும்.