உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் துளசி பூஜை

நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் துளசி பூஜை

பெரியகுளம், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சுவாதி திருநட்சத்திரத்தை முன்னிட்டு, அகண்ட ஹரே ராம நாமகீர்த்தனம் நடந்தது. கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு பூஜை, மாலையில் அஷ்டோத்திர பூஜை, துளசி பூஜை நடந்தது. கூட்டுபிரார்த்தனையை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி எழுந்தருளலில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் , பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !