கரியகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்
ADDED :2749 days ago
எலச்சிபாளையம்: கரியகாளியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, எலச்சி பாளையம் ஒன்றியம், பெரியமணலியில் பிரசித்தி பெற்ற கரியகாளியம்மன் கோவிலில், மார்ச், 20ல், கம்பம் நடப்பட்டது. 27ல், பூச்சாட்டல் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும், கிராம சாந்தி, கொடியேற்றம், சக்தி அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நாட்களில், பல்வேறு அலங்காரங்களில் சுவாமி அருள்பாலித்தார். நேற்று காலை, கோவில் வளாகத்தில், பக்தர்கள் பொங்கல் வைத்தனர். மாலை, 5:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரினை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து, நாகேஸ்வரர் கோவிலைச் சுற்றி ஓம்சக்தி, பராசக்தி கோஷம் முழங்க, முக்கிய வீதிகளின் வழியாக இழுத்து வந்தனர்.