பரிமள ரங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு!
ADDED :5059 days ago
சேலம்: சேலம், அம்மாபேட்டை கிருஷ்ணன்புதூர் பரிமள ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு, கிருஷ்ணன்புதூர், ஆதிசெல்வன் கணபதி தெரு, வழியாக பஜனை குழு வலம் வந்த பின், 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு, சாய்பாபா குழுவினரின் பக்தி பஜனை பாடல் நிகழ்ச்சி, 8.30 மணிக்கு ஆரோக்கியமான வாழ்க்கை என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி, பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.