உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோவிலில் பிரமோத்ஸவம் துவக்கம்!

ஐயப்பன் கோவிலில் பிரமோத்ஸவம் துவக்கம்!

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை ஐயப்பன் சுவாமி கோவிலில் பிரம்மோத்சவம் நேற்று காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், மகா சாஸ்தா ஹோமம்,பூர்ணாகுதி அபிஷேகம் நடந்தது. காலை 11 மணிக்கு துவஜஸ்தம்பபூஜையுடன் கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை 4.15 மணிக்கு சுவாமிக்கு காப்பு கட்டுதல், யாகசாலைபூஜைகள் நடந்தன. இரவு 8 மணிக்கு கேடய வாகனத்தில் சுவாமி ஐயப்பன் திருவீதி உலா வந்தார். ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் கருப்பையா செட்டியார், ராதாகிருஷ்ணன் செட்டியார் குடும்பத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !