உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனியப்பன் கோவிலில் புனித நீர் ஊர்வலம்

முனியப்பன் கோவிலில் புனித நீர் ஊர்வலம்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த, போத்தாபுரம் கல்லேரி முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பெண்கள் புனித நீரை எடுத்து, ஊர்வலமாக சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த, போத்தாபுரம் கல்லேரி முனியப்பன் கோவில், கும்பாபிஷேக திருவிழாவையொட்டி, மார்ச், 26, முளைப்பாரி விடுதல், ஆலய முகூர்த்தக்கால் நடுதல் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தென்பெண்ணையாற்றில் இருந்து, புனித நீரை எடுத்துக் கொண்டு, ஊர்வலமாக சென்றனர். மாலை, 5:00 மணிக்கு முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சியும், கும்ப அலங்காரம், தீபாராதனை நடந்தது. இன்று காலை, 8:00 மணிக்கு, முனீஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !