ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2744 days ago
பெருந்துறை: பெருந்துறை அடுத்த, திங்களூர் அருகே, தோரணவாவி பகுதியில், 850 ஆண்டுகள் பழமையான அருள்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. சிவாச்சாரியார்கள், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். முன்னதாக, யாகசாலையில், நான்குகால யாக பூஜைகள் நடைபெற்றன. விழாவில், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
* பெருந்துறை, சென்னிமலை ரோடு, காந்தி நகர் பகுதியில், புதியதாக கட்டப்பட்ட ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷே விழா, நேற்று காலை நடந்தது. மருதாச்சல குருக்கள் தலைமையேற்று, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார். விழாவில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.