காவல்காரன்பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2744 days ago
குளித்தலை: காவல்காரன்பட்டி, விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கல்யாண உற்சவ விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., காவல்காரன்பட்டி தெற்குதெரு விநாயகர், காளியம்மன், பாம்பலம்மன் ஆலய கும்பாபிஷேக விழா மற்றும் அரசு வேம்பு திருக்கல்யாண விழா நேற்று முன்தினம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு, ஆராதனை நடந்தது. பின்னர், கும்பாபிஷேக விழா மற்றும் அரசு வேம்பு திருக்கல்யாண விழா சிறப்பாகநடந்தது. கல்யாணத்தில் பங்கேற்றவர் களுக்கு, மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கலைநிகழ்ச்சி கள் நடந்தன.