சேலம் சுப்ரமணியர் கோவிலில் சீரமைப்பு பணி
ADDED :2740 days ago
சேலம்: சுப்ரமணியர் கோவில் சீரமைப்பு பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சேலம், அம்மாபேட்டை, குமரகுரு சுப்ரமணியர் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிப்படி, மீண்டும் கும்பாபி ?ஷகம் நடத்த வேண்டும். அதன்படி, விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 60 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி துவங்கியுள்ளது. அதில் உடைந்த சிலைகள் சீரமைக்கப்பட்டு, வண்ணம் பூசப்பட்டு வருகிறது. மேலும், கோவிலின் மேற்கூரை, தரையில் கருங்கல் பதிக்கப்படவுள்ளது. இப்பணி நிறைவடைந்தவுடன், கும்பாபி ?ஷகத்துக்கு தேதி குறிக்கப்படும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.