உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதஞ்சலி முனிவர் பிரதிஷ்டை விழா

பதஞ்சலி முனிவர் பிரதிஷ்டை விழா

கடலாடி:மேலக்கிடாரத்தில் பழமையான சிவன் கோயிலாக திருவனந்தீஸ்வரமுடையார் சமேத சிவகாமி அம்மன் சன்னதி உள்ளது.கோயில் வளாகத்தில் பதஞ்சலி மாமுனிவர் உருவம் பிரதிஷ்டை விழா நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், கடுக்காய், தயிர், விபூதி உள்ளிட்ட அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.பூஜைகளை செந்தில்குமார் செய்தார். ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் சிவநாம அர்ச்சனை செய்தனர். ஏற்பாடுகளை மேலக்கிடாரம் மாதாந்திர பிரதோஷ வழிபாட்டு கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !