பத்ரகாளியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு
ADDED :2740 days ago
ஈரோடு: பத்ரகாளியம்மன் கோவில் உண்டியல்களில், நான்கு லட்சம் ரூபாய் காணிக்கையை, பக்தர்கள் செலுத்தியிருந்தனர். ஈரோடு, கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த பிப்., நடந்தது. இந்நிலையில் உண்டியல் திறப்பு நேற்று நடந்தது. மொத்தம் எட்டு உண்டியல்கள் உள்ளன. அவற்றில் மூன்று லட்சத்து, 95 ஆயிரத்து, 825 ரூபாய், 42.5 கிராம் தங்கம், 140.7 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையா, ஆய்வாளர் பாலசுந்தரி, பரம்பரை அறங்காவலர் தங்காயம்மாள் முன்னிலையில் நடந்த, காணிக்கை எண்ணும் பணியில், மக்கள், கோவில் பணியாளர் கலந்து கொண்டனர்.