108 கோ பூஜை விழா: தம்பிராட்டி அம்மன் கோவிலில் கால்கோள்
ADDED :2740 days ago
சென்னிமலை: சென்னிமலை அருகே, இரட்டை புலவர்களால் பாடப்பட்ட, ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவில், 400 ஆண்டு பழமை வாய்ந்தது. கடும் வறட்சி நீங்கி, மழை வளம் பொழியவும், நாடு செழிக்கவும், வரும், 14ல், 108 நாட்டு மாடுகளை கொண்டு, கோ பூஜை நடக்கிறது. இதை தொடர்ந்து யாகம் நடக்கிறது. இதற்கான கால்கோள் விழா, கோவிலில் நேற்று நடந்தது. சிவகிரி ஆதீனம் 75வது குரு மகா சன்னிதானம் பாலமுருகன் ஈசான சிவாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்தார். கோ பூஜை விழாவில், நாட்டு மாடு வளர்ப்போர், மாடு மற்றும் கன்றுடன் கலந்து கொள்ளலாம். கட்டணம் ஏதுமில்லை. மாடுகளை பதிவு செய்ய 94433-40363 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.