கைலாசநாதர் கோவிலில் தொண்டர்கள் தூய்மைப்பணி
ADDED :2739 days ago
தாரமங்கலம்: கைலாசநாதர் கோவிலில், உழவாரப் பணிக்குழுவினர், தூய்மைப் பணி மேற்கொண்டனர். ஈரோடு, திருத்தொண்டீஸ்வரர் உழவாரப் பணிக்குழுவினர், மாதம் ஒரு திருத்தலத்தை தேர்வு செய்து, அவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், வரும், 22ல், மஹா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. அதையொட்டி, இக்கோவிலை தேர்வு செய்த குழுவினர், நேற்று, அங்கு தூய்மைப்பணி மேற்கொண்டு, சுவற்றுக்கு வெள்ளை அடித்தனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.