உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

அங்காளம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

ஆத்தூர்: மண்டல பூஜையொட்டி, பால்குட ஊர்வலம் நடந்தது. ஆத்தூர், கடைவீதி, அங்காளம்மன் கோவிலில், கடந்த பிப்., 19ல் கும்பாபி ?ஷகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை நடந்து வந்தது. நேற்று, 48ம் நாளில், மண்டல பூஜையொட்டி, காலை, 8:00 மணிக்கு, 108 பால் குடங்கள் எடுத்து, பக்தர்கள் ஊர்வலம் வந்து, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு அபி?ஷகம், 108 சங்காபி?ஷகம் நடந்தது. பின், ஏராளமான பெண் பக்தர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, கூட்டு வழிபாடு நடத்தினர். இரவு, சந்தனகாப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !