மகா கால பைரவர் கோவிலில் அஷ்டமி பூஜை
ADDED :2740 days ago
ஊத்துக்கோட்டை: மகா கால பைரவர் கோவிலில் நடந்த தேய்பிறை அஷ்டமி பூஜையில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில், தேய்பிறை அஷ்டமி பூஜை சிறப்பு வாய்ந்தது.மாதம் ஒருமுறை வரும் இவ்விழாவில் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வர். நேற்று, இவ்விழாவை ஒட்டி, காலை, 10:00 மணிக்கு, மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், மகா தீபாராதனை காட்டப்பட்டது.