ராமர் கோவில் கல்யாண உற்சவம்
ADDED :2797 days ago
நகரி: கோதண்டராமர் கோவிலில் நடந்து வரும் ராமநவமி உற்சவ விழாவில், நேற்று, திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.சித்துார் மாவட்டம், நகரி, பழைய பஜனை கோவில் தெருவில் உள்ள கோதண்டராமர் கோவிலில், ராமநவமி விழா, 10 நாட்களுக்கு முன் துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலையில் உற்சவர் வீதியுலா மற்றும் பஜனை குழுவினரால் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. விழாவின் கடைசி நாளான நேற்று, திருக்கல்யாண உற்சவம் மற்றும் பட்டாபிஷேகம் நடந்தது.இதில், உற்சவர் சீதா, ராமருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.