பேச்சியம்மன் கோயில் பங்குனி திருவிழா
ADDED :2740 days ago
தேவாரம்:தேவாரம் பேச்சியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. துவக்க நிகழ்ச்சியாக கரகம் எடுத்து சாமி பெட்டி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. இரண்டாம் நாளில் பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக வந்தனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மஞ்சள் நீராட்டம் நடந்தது. பாரிவேட்டை நடத்தி திருவிழா முடித்து வைக்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைவர் தென்னரசு, செயலாளர் பாலன், பொருளாளர் தங்கத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.