திருப்பரங்குன்றம் கோயிலில் உற்சவ சாந்தி பூஜை
ADDED :3092 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு உற்ஸவ சாந்தி பூஜையில் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோயில் திருவாட்சி மண்டபத்தில் உற்ஸவர் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். சுவாமி முன் தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜை நடந்தது. 11 வகையான திரவிய அபிஷேகம் முடிந்து சுவாமிக்கு தங்ககுடம், தெய்வானைக்கு வெள்ளி குடங்களில் புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது சர்வ அலங்காரத்தில் சுவாமி, அம்மன் ஆஸ்தான மண்டபத்தை வலம் சென்று அருள்பாலித்தனர்.