மாரியம்மனுக்கு பங்குனி திருவிழா
ADDED :2921 days ago
ராஜபாளையம்:ராஜபாளையம் முடங்கியார் ரோடு அம்பேத்கர் நகர் மாரியம்மனுக்கு,பங்குனி திருவிழா நடந்தது. இரண்டு நாள் நடைபெற்ற விழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். நேற்று முன்தினம் பால்குடம், நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் வீதிகளை சுற்றி வந்து குத்த பாஞ்சான் ஆற்று ஓடையில் கரைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர்த்தலைவர் ராஜேஸ் கண்ணன் செய்தார்.