தீத்தாகிழவனுாரில் கோயில் திருவிழா
ADDED :3075 days ago
வடமதுரை, ஏஅய்யலுார் தீத்தாகிழவனுாரில் சக்திவிநாயகர், காளியம்மன், மாரியம்மன், பட்டவன் கோயில் உள்ளது. இங்கு 3 நாள் வருடாந்திர திருவிழா தோரணம் கட்டும் பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுடன் துவங்கியது. அம்மன்கள் கரகம் பாலித்து கோயில் வந்தன. மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல், பூக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழச்சிறப்பு, பாரிவேட்டை நிகழ்ச்சிகளை தொடர்ந்து அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது. விழா ஏற்பாட்டினை தீத்தாகிழவனுார் கிராம மக்கள் செய்திருந்தனர்.