ராமநவமி பக்தி சொற்பொழிவு
ADDED :2798 days ago
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ராமநவமி பக்தி சொற்பொழிவு நடந்தது. குமாரபாளையம், ஆன்மிக பக்தர்கள் சார்பில், ராமநவமி விழாவையொட்டி, நகராட்சி அலுவலகம் அருகே, வாசவி மகாலில் பக்தி சொற்பொழிவு நடந்தது. பவானி ஆன்மிக சொற்பொழிவாளர் குருபிரசாத், ராமநவமி விழா, ராமனின் பெருமைகள், ராமாயண காவியத்தின் சாராம்சம் குறித்து பேசினார். ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் சொற்பொழிவை கேட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.