திரவுபதி அம்மனுக்கு மகாபாரத வசந்த விழா
ADDED :2744 days ago
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே நடந்த, மகாபார வசந்த விழாவில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. போச்சம்பள்ளி அடுத்த, கோணனூர் கிராமத்தில் உள்ள, திரவுபதியம்மன் கோவில் வசந்த விழா கடந்த, 4ல் துவங்கியது. இதில், மகாபாரதம் குறித்து வரும், 22 வரை, தினமும் காஞ்சிபுரம் ரேவதியின் விரிவுரையும், கிருஷ்ணன் குழுவினரின், கவிதை வாசித்தலும் நடக்கிறது. இதையடுத்து, நேற்று காலை, மகளிர் மன்றம் சார்பில், விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.