தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயிலில் வரும் 8ம் தேதி பவுர்ணமி பூஜை!
ADDED :5059 days ago
திருநெல்வேலி:தச்சநல்லூரில் நெல்லையப்பர்,காந்திமதி அம்பாள் கோயிலில் வரும் 8ம் தேதி பவுர்ணமி பூஜை நடக்கிறது.தச்சநல்லூர் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் 25வது பவுர்ணமி பூஜை வரும் 8ம் தேதி நடக்கிறது. இதைமுன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடக்கிறது.காலை 10 மணிக்கு நடராஜர் ரதவீதிஉலா நடக்கிறது. மதியம் ஒரு மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு கிரிவலம் நடக்கிறது. எனவே பவுர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் அருள்பெற்று செல்லுமாறு கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.வரும் 8ம் தேதியன்று நடைபெறும் அன்னதானத்திற்கு, அரிசி, பருப்பு, காய்கறிகள் கொடுக்க விரும்பும் பக்தர்கள் கோயில் அர்ச்சகரிடம் கொடுக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.