காளியம்மன் -மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
ADDED :2899 days ago
பேரையூர், பேரையூரில் காளியம்மன் -மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது. இத்திருவிழா ஏப்.,1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒருவாரமாக இரவில் அம்மன் நகர்வலம் நடந்தது. பக்தர்கள் விரதமிருந்து நேற்று அக்னி சட்டி எடுத்தனர். காலையில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தும் பூஜை நடந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.