விஸ்வநாதப்பேரி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா!
ADDED :5060 days ago
சிவகிரி:விஸ்வநாதப்பேரி ரேணுகாதேவி அம்மன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சப்பர பவனி நடந்தது.விஸ்வநாதப்பேரியில் சிறப்பு பெற்றது ரேணுகாதேவி அம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் கோயிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. மாலை 5 மணியளவில் மூலவர் சப்பரத்தில் எழுந்தருளி திருக்காட்சி கொடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கம்மவார்நாயுடு சமுதாய நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அய்யாசாமி, நாகராஜன், ஜெயக்குமார், ராஜசேகரன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.