உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசியில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகாசியில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகாசி: சிவகாசி  மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல்  விழா  தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் விழா,ஏப்.,1 ல்கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மன்,  தினமும்   பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு 9 ம் நாள் விழாவில் பொங்கல்  , அக்னி சட்டி ,  முடி  , முத்து காணி க்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை என நேர்த்திக்கடன் செலுத்தினர்.  கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி குடும்பத்தோடு  வந்த பக்தர்கள் , வேப்பிலையில் உருண்டு வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று காலை  நாட்டாண்மைகாரர்கள் ரதம் வடம் தொடுதல் நிகழ்ச்சி நடந்தது.   தொடர்ந்து மாலையில் சின்ன தேரில் விநாயகர் எழுந்தருள, ரதவீதிகளில் உலா வந்து நிலைக்கு வந்தார். அதன்பின் மாரியம்மன் எழுந்தருளிய  தேரை , பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.  தேரானது கீழ ரதவீதி, தெற்கு ரத வீதியில் சென்றது.   ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம்  செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !