உத்தரகோசமங்கையில் ஏப். 20ல் சித்திரைவிழா கொடியேற்றம்
ADDED :2800 days ago
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.20ல் கொடியேற்றம் நடக்கிறது. ஏப். 19 அன்று இரவு 7:00 மணிக்கு அனுக்ஞை பூஜை நடக்கிறது. மறுநாள் ஏப். 20ல் கோயில் கொடிமரத்தின் முன்பு காலை 10:00 மணிக்கு சிவலிங்க கொடிப்பட்டம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளன. ஏப். 27 மாலை சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் வீதியுலாவும் நடக்கும். ஏப். 29ல் மாலை தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான பரம்பரை தர்மகர்த்தா ராணி ஆர்.பிரம்ம கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார், திவான் மகேந்திரன், மேலாளர் சுவாமிநாதன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் ஸ்ரீதர் ஆகியோர் செய்து வருகின்றனர்.