அய்யர்மலை சித்திரை தேரோட்டம்: கால் ஊன்றி திருவிழா தொடக்கம்
ADDED :2838 days ago
குளித்தலை: அய்யர்மலை சித்திரை பெருவிழா தேரோட்டத்திற்கு கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையில், சுரும்பார் குழலி உடனுறை ரெத்தினகிரீஸ்வரர் சுவாமி கோவில், சித்திரை பெருவிழா மற்றும் தேரோட்டம், வரும், 20ல், தொடங்கி மே, 1ல் முடிகிறது. திருவிழாவிற்கு கால் ஊன்றுதல் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, இந்து சமய அறநிலைய துறை உதவி இயக்குனர் சூரிய நாராயணன் தலைமை வகித்தார். இ.ஓ., ஜெயக்குமார், அலுவலர் மாரியப்பன், கோவில் குடிபாட்டுக்காரர்கள், பக்தர்கள், உபயதாரர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு, தினந்தோறும் சுவாமி திருவீதி உலா, அபிஷேக ஆராதனை நடைபெறும். வரும், 28ல் தேரோட்டம் நடக்கிறது.