பரமக்குடியில் ஏப்.27ல் மீனாட்சி திருக்கல்யாணம்
ADDED :2903 days ago
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.18ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் கற்பகத்தரு, கிளி, பூத, சிங்க, கைலாச, காமதேனு, ரிஷப, நந்திகேஸ்வரர், குதிரை ஆகிய வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிவலம் வருவர். ஏப். 26ல் திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சியும், மறுநாள் மாலை 6:00 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. ஏப்.28ல் சித்திரை தேரோட்டம், மறுநாள் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடையும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.