சம்பந்த விநாயகர் கோவிலில் லட்ச தீப விழா கோலாகலம்
ADDED :2752 days ago
திருவண்ணாமலை: வேட்டவலத்தில் உள்ள, சம்பந்த விநாயகர் கோவிலில் நடந்த, லட்ச தீப விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கிராமத்தில் உள்ள, சம்பந்த விநாயகர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, லட்ச தீப விழா நடந்தது. இதை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மாலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, லட்ச தீப விழா நடந்தது. ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் என, ஒரு லட்சம் பேர் தீபமேற்றி, வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, நாதஸ்வர கச்சேரி, வாணவேடிக்கை நடந்தது.