உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி

ஆஞ்சநேயர் கோவிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி

விழுப்புரம: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில், லட்சதீப விழாவையொட்டி, பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் திரு.வி.க., வீதி ஆஞ்சநேயர் கோவிலில், சித்திரை முதல் நாள் லட்சதீப விழா துவங்கியது. விழாவையொட்டி, சென்னை மேடவாக்கம் ராமபக்த ஆஞ்சநேயா சாரிடபிள் டிரஸ்ட் ஸ்ரீ ஸ்ருதிலயா கலைக்கூட்டம் சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பரம்பரை அறங்காவலர் குமார், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் தனபால் ஆகியோர் தலைமை தாங்கினர். அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரி தலைவர் விஜயா முத்துவண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், மாணவர்களின் பரத நாட்டியம் நடந்தது. நிகழ்ச்சியில், சுமதிசக்திவேல், யாமினி, முரளிதரர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !