மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி ஊர்வலம்
                              ADDED :2754 days ago 
                            
                          
                           ஈரோடு: ஈரோடு கிருஷ்ணம்பாளையம், சிந்தன்நகர், சமயபுரம் மாரியம்மன் கோவிலில், 23ம் ஆண்டு தீர்த்த திருவிழா நடக்கிறது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் அக்னி குல தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கருங்கல்பாளையம் காவிரியாற்றில் இருந்து, தீர்த்தக்குடம், பால்குடம், பூச்சட்டி ஏந்தி, பல்வேறு அலகு குத்தி, பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். சந்தனக்காப்பு அலங்காரத்தில், அம்மன் அருள் பாலித்தார். பொங்கல் வைபவம், மாவிளக்கு பூஜை இன்று நடக்கிறது. மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, நாளை மாலை நடக்கிறது.