ஊட்டி ஐயப்பன் கோவிலில் விஷூக்கனி பூஜை
                              ADDED :2754 days ago 
                            
                          
                           ஊட்டி:ஊட்டி ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத, பூஜைகள், விஷூக்கனி தரிசனத்துக்காக நடை திறக்கப்பட்டது. கோவில் குருக்கள் தீபம் ஏற்றி வைத்தார். இதன் பின், படி பூஜை, உதய அஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலசம் போன்ற பூஜைகளும் நடந்தது. பின்னர் வழக்கமான பூஜைகள் நடந்தது. விஷூக்கனி பூஜையை காண திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.குன்னுார், அருவங்காடு, வெலிங்டன் ஐயப்பன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு ’கைநீட்டம்’ வழங்கப்பட்டது.இதேபோல், மஞ்சூர், கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோவில் விஷூக்கனி பூஜையையொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக நடை திறக்கப்பட்டது.