உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வார பிரசாதம்

இந்த வார பிரசாதம்

வெள்ளைப் பணியாரம்

என்ன தேவை

பச்சரிசி        –  400 கிராம்
உளுந்தம் பருப்பு    –  50 கிராம்
உப்பு        – 1 டீ ஸ்பூன்
எண்ணெய்        –  1/4 லி.,

செய்வது எப்படி: அரிசி, உளுந்தம் பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த மாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அதிகம் காய்ந்து விடாமல் மிதமான சூட்டில் மாவை எடுத்து ஊற்றவும். பணியாரம் மேலே எழும்பி வந்தவுடன், திருப்பிவிட்டு உடனே எடுக்கவும்.

குறிப்பு: பணியாரத்தின் உள்ளே வேகாமல் இருந்தால் மாவில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றவும். பணியாரம் ஊற்ற வட்டமான, ஆழம் அதிகம் இல்லாத ஏந்தல் கரண்டியாக இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !