சங்ககிரி தேர்த்திருவிழா: முகூர்த்தக்கால் நடல்
ADDED :2765 days ago
சங்ககிரி: சங்ககிரி, மலைக்கோட்டை சென்னகேசவப் பெருமாள் கோவிலில், சித்திரை பவுர்ணமி தேர்த்திருவிழா, வரும், 29ல் நடக்கவுள்ளது. அதையொட்டி, நேற்று மாலை, மலையடிவாரத்திலுள்ள உற்சவ மண்டபத்தில், தேருக்கு சிறப்பு பூஜை செய்து, முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து, ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர். வரும், 21ல், சுவாமி, மலையிலிருந்து இறங்குதல், 29ல், தேர்த் திருவிழா, மே, 9ல், சுவாமி, மலை ஏறுதல் ஆகிய நிகழ்ச்சி நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.