மலைக்கு செல்ல குவிந்த பக்தர்கள்: சிறப்பு பஸ்கள் இல்லாததால் அவதி
ADDED :2832 days ago
மேட்டூர்: மாதேஸ்வரன்மலைக்கு செல்ல, மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பக்தர்கள் சிறப்பு பஸ்கள் வரத்து தாமதமானதால் அவதிப்பட்டனர். அமாவாசையை முன்னிட்டு, சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களிலிருந்து, மேட்டூர் வழியாக, பக்தர்கள், மாதேஸ்வரன்மலைக்கு செல்வர். அதையொட்டி, மேட்டூரிலிருந்து, மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பக்தர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, பஸ்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். நேற்று காலை, 9:00 மணிக்கு, மலைக்கு செல்ல, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதற்கேற்ப, பஸ்கள் இயக்கப்படாததால், அவர்கள் காத்திருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு பின், மூன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றை முற்றுகையிட்ட பக்தர்கள், போட்டிபோட்டு இருக்கைகளை பிடித்தனர். பின், தொடர்ச்சியாக சிறப்பு பஸ்கள் இயக்கியதால், மலைக்கு பக்தர்கள் புறப்பட்டனர்.